தனுஷ்கோடி கடற்கரையில் சேதம் அடைந்த நிலையில் புயல் நினைவு சின்னம்
தனுஷ்கோடி கடற்கரையில் பல வருடங்களாக சேதம் அடைந்து காட்சி தரும் புயல் நினைவு சின்னத்தை சீரமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்,
இதையடுத்து புயலில் உயிரிழந்தவர்களின் நினைவாக தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் அரசு சார்பில் புயலை குறிக்கும் விதமாக கல்வெட்டுடன் கூடிய நினைவு தூண் வைக்கப்பட்டது. இதில் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய 3 மொழிகளால் எழுதப்பட்ட கல்வெட்டும் நினைவு தூணை சுற்றி பதிக்கப்பட்டது.
இந்தநிலையில் எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் வைக்கப்பட்ட இந்த நினைவு சின்னம் மற்றும் அதில் பதிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளும் முழுமையாக உடைந்து சேதமாகி உள்ளது. பல வருடங்களாக எவ்வித பராமரிப்பும் இல்லாமல் அலங்கோலமாக காட்சியளித்து வருகிறது. சுற்றுலாத்துறை மூலம் ராமேசுவரம் பகுதிக்கு பல கோடி நிதி ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், சேதமடைந்த நினைவு சின்னத்தை சீரமைக்க இதுவரை நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை ஆகியவற்றின் சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மேலும் நினைவு தூண் அமைக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை ஒரு முறை கூட தனுஷ்கோடி அழிவு தினத்தன்று அரசு சார்பிலும், மற்ற அமைப்புகள் சார்பிலும் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது இல்லை. ஆகவே எம்.ஆர்.சத்திரம் கடற்கரையில் சேதமான நிலையில் உள்ள நினைவு சின்னத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்த்து செல்லவும், ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் தனுஷ்கோடி புயலில் உயிரிழந்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று சுற்றுலா பயணிகளும், மீனவ மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி பகுதியில் கடந்த 1964-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான புயல் மற்றும் கடல் கொந்தளிப்பால் தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்து போனது. அதில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போனார்கள்.