தோண்டப்பட்ட குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்த தொழிலாளி பரிதாப சாவு
பொள்ளாச்சி மாட்டு சந்தையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தோண்டப்பட்ட குழியில் தேங்கி நின்ற தண்ணீரில் விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சியில் ரூ.109 கோடியே 62 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாட்டு சந்தையில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க குழி தோண்டப்பட்டது. அந்த இடத்தில் நீர் ஊற்று எடுப்பதாலும், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாக குழியில் 12 அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கிடையில் மாட்டு சந்தையில் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர் நேற்று குழியில் தவறி விழுந்தார். தண்ணீரில் தத்தளித்த அவரால் நீச்சல் அடித்தும் கரையேற முடியவில்லை. இதையடுத்து அங்கு நின்றவர்கள் குதித்து அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதற்குள் அவர்பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்த குருசாமி (வயது 60) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 20 ஆண்டுகளாக மாட்டு சந்தையில் வேலை பார்த்து வருகிறார். மேலும் இதற்கு முன் மாடுகளை வாங்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மாட்டு வியாபாரிகள் சங்க மாநில செயலாளர் தென்றல் செல்வராஜ் கூறியதாவது:-
பாதாள சாக்கடை திட்டத்திற்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி மாட்டு சந்தை பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் நடக்கும் இடத்தில் நீர் ஊற்று எடுப்பதால் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாரத்தில் செவ்வாய், வியாழக்கிழமைகளில் நடைபெறும் சந்தைக்கு வியாபாரிகள், விவசாயிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் குழியை சுற்றி தடுப்புகள் அமைக்காததால் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. தற்போது மாட்டு சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்த குருசாமி என்பவர் தவறி விழுந்து இறந்து விட்டார்.
இதுபோன்ற இன்னொரு சம்பவம் நடைபெறும் முன் தண்ணீரை முழுமையாக அப்புறப்படுத்த வேண்டும்.
மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பகுதியில் நீர் ஊற்று எடுப்பதால் பணிகள் தரமானதாக இருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிக்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மாட்டு சந்தையை அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு மாற்றினார்கள். ஆனால் அங்கு எந்தவித வசதிகளும் செய்து கொடுக்காததால் மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. எனவே மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.