கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கரூர்,
தாந்தோன்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் லட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜானகி வரவேற்று பேசினார். பொருளாளர் செல்வி, மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் சுப்ரமணியன் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட்ட ரீதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 10, 20, 30 ஆண்டுகள் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு 8-வது ஊதியக்குழுவில் வழங்க வேண்டிய ஊதிய நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இதில் 10 ஆண்டு பணி முடித்த சமையலர், சமையல் உதவியாளருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200-ம், 20 ஆண்டு பணி முடித்தவர் களுக்கு ரூ.400-ம், 30 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு ரூ.600-ம் வழங்க வேண்டும்.
10-ம் வகுப்பு முடித்த சமையலர், உதவியாளர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அமைப்பாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். பணியில் இருக்கும் போது இறந்த சத்துணவு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணியை உடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் செல்வன், கல்வி துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் லட்சுமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அரவக்குறிச்சி, கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.