சம்பளம் வழங்க வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

சம்பளம் வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2018-08-29 22:45 GMT
கும்பகோணம்,

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் (ஜூலை) வழங்க வேண்டிய சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அலுவலக பராமரிப்பு, கேபிள் இணைப்பை சீர் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கும்பகோணம் தொலை தொடர்பு மாவட்டத்தில் பணியாற்றும் 350-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று பி.எஸ்.என்.எல். ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். கும்பகோணத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மேலும் செய்திகள்