தேவகோட்டை, கண்ணங்குடியில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் இல்ல விழாக்களில் டி.டி.வி. தினகரன் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் இல்ல விழாக்களில் டி.டி.வி.தினகரன் கலந்துகொண்டு விழாக்களை நடத்தி வைத்தார்.

Update: 2018-08-29 22:30 GMT

தேவகோட்டை,

சிவகங்கை மாவட்டத்தில் நடந்த அ.ம.மு.க. நிர்வாகிகள் இல்ல விழாக்களில் கலந்துகொள்வதற்காக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் காரைக்குடி வந்தார். பின்னர் அங்கிருந்த நேற்று காலை தேவகோட்டைக்கு வந்த தினகரனுக்கு முள்ளிக்குண்டு பகுதியில் தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் தென்னீர்வயல் கணேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் கொடியை தினகரன் ஏற்றிவைத்தார். அப்போது அவருக்கு கட்சியினர் வீரவாள் பரிசளித்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக தேவகோட்டை பஸ் நிலையம் வந்தபோது, நகர செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஆண்டவர் செட் அருகே கட்சியின் கொடியேற்றினார். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசினார். அதன்பின்னர் தேவகோட்டை ஒத்தக்கடை பகுதிக்கு வந்த அவருக்கு தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய செயலாளர் இளங்குடி சங்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கண்ணங்குடி புறப்பட்டு சென்ற டி.டி.வி. தினகரனுக்கு, சித்தானூரில் மாணவரணி செயலாளர் சித்தானூர் சரவண மெய்யப்பன் என்ற கார்த்திக் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. அதன்பின்னர் கண்ணங்குடி ஒன்றிய கழகம் சார்பில் அனுமந்தக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் தேர்போகி வி.பாண்டி தலைமையில் கட்சியின் கொடியை தினகரன் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குருந்தூர் செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்று சாத்தனக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி கழக செயலாளரும், கண்ணங்குடி ஒன்றிய பொறுப்பாளருமான கே.ஆர்.பாஸ்கரன் அம்பலம் சகோதரர் இளங்கோவன்–பிரியா ஆகியோர் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் தேவகோட்டையை அடுத்த இறகுசேரியில் மாவட்ட முக்கிய பிரமுகர் நா.குமார் இல்ல புகுமனை புகுவிழாவில் கலந்துகொண்டார். அதன்பின்பு முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.கருப்பையா இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சொர்ணலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது உடல் நலம் குறித்து நேரில் விசாரித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் வக்கீல் இறகுசேரி முருகன், மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப.கருப்பையா, ஜெ.பேரவை மாநில செயலாளர் மாரியப்பன் கென்னடி, காரைக்குடி நகர செயலாளர் சரவணன், மானாமதுரை நகர செயலாளர் கோபால், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் துருக்கி, ரபீக்ராஜா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஊரவயல் ராமு, மாவட்ட மகளிரணி துணைத்தலைவர் சோபியா பிளாரன்ஸ், கோதண்டபாணி, பூப்பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்