வானவில் : சாம்சங்கின் புதிய அதிரடி ‘கேலக்ஸி நோட் 9’
சமீப காலமாகவே ஸ்மார்ட்போன் சந்தை மிகப் பெருமளவில் விரிவடைந்து வருகிறது.
ஒவ்வொரு நிறுவனமும் போட்டி போட்டுக் கொண்டு அதிக நினைவுத் திறன், பிராசஸிங் பவர், அதிக மெகா பிக்ஸெல் கேமரா, இரட்டைக் கேமரா, கூடுதல் பேட்டரி திறன் என பல்வேறு வசதிகளை அடுத்தடுத்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றன.
பார்ப்பதற்கு பிரீமியம் தோற்றம், ஸ்டைலான வடிவமைப்பு இவற்றுடன் ஸ்மார்ட்போனின் செயல்பாடுகளே அவற்றின் விற்பனையை நிர்ணயிக்கின்றன. கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனமும் சமீபத்தில் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4000 எம்.ஏ.ஹெச். (mAh) பேட்டரி இருப்பது சிறப்பம்சமாகும். முந்தைய மாடலைக் காட்டிலும் பல்வேறு மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் எஸ் பென் ஸ்டைலஸ் புளூடூத் கனெக்டிவிடி வசதியுடன் வந்துள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் செயல்படும். மேலும் தொடு திரை டிஸ்பிளே பெரியதாக உள்ளது. அனைத்திற்கும் மேலாக 12 எம்.பி. இரட்டை கேமரா பின்பகுதியில் உள்ளது. அத்துடன் 512 ஜி.பி. ஸ்டோரேஜ் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்களில் மிக அதிக அளவு ஜி.பி. உள்ள போன் இப்போதைக்கு இது ஒன்றுதான். அதைக் கருத்தில் கொண்டே இதன் விலையும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்ட விலை ரூ. 67,900 ஆகும். இதில் 6 ஜி.பி. ரேம் மற்றும் 128 ஜி.பி. நினைவகம் உள்ளது. அடுத்ததாக ரூ. 84,900 மாடலில் 8 ஜி.பி. ரேம் மற்றும் 512 ஜி.பி ஸ்டோரேஜ் வசதியும் உள்ளது. மிட்நைட் பிளாக், மெட்டாலிக் காப்பர், ஓஷன் புளூ என மூன்று கண்கவர் வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.
தங்களது இணையதளத்தில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6 ஆயிரம் கேஷ் பேக் சலுகையை இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல ஹெச்.டி.எப்.சி. கிரெடிட் கார்டு மூலம் வாங்கினால் சுலப தவணை திட்டத்திற்கு (இ.எம்.ஐ.) கட்டணம் கிடையாது. நிறுவனமே கூடுதல் கட்டணம் இல்லாத சுலப தவணைத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதேபோல பே-டிஎம் மால் மூலம் வாங்கினாலும் ரூ. 6 ஆயிரம் கேஷ் பேக் சலுகையை வாடிக்கையாளர்கள் பெறலாம். அதேபோல இந்த ஸ்மார்ட்போனுடன் ஸ்மார்ட் வாட்ச்சை ரூ. 4,999-க்கு நிறுவனம் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ. 22,900 ஆகும்.
ஏர்டெல் நிறுவனம் சிறப்பு சலுகையின் மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த போனை அளிக்க உள்ளது. அதன் மூலம் முன் பணமாக ரூ. 7,900 செலுத்தி மாதம் ரூ. 2,999 தொகையை 24 மாதங்களுக்கு செலுத்தும் சுலப தவணை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். மேலும் மாதத்திற்கு 100 ஜி.பி. மொபைல் டேட்டா என ஓராண்டுக்கு அளிக்க உள்ளது.