வானவில் : ஹேண்ட் சானிடைஸர்

அமெரிக்காவைச் சேர்ந்த டச்லேண்ட் நிறுவனம் மிகவும் அழகிய மேம்பட்ட ஹேண்ட் சானிடைஸரை உருவாக்கியுள்ளது.

Update: 2018-08-29 08:14 GMT
உலகில் 80 சதவீத நோய்கள் தொற்றும் தன்மை உடையவை. குறிப்பாக ஜலதோஷம், சளி, இருமல், வயிற்றுப் போக்கு, இன்புளுயன்ஸா, தீவிரமான தோல் நோய்கள் உள்ளிட்ட அனைத்துமே தொற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படுபவை.பெரும்பாலும் கைகளின் மூலமாக இவை பரவி உடலுக்கு உபாதையை ஏற்படுத்துகின்றன.

இதனாலேயே உணவு சாப்பிடும் முன்பு கைகளை சுத்தமாக கழுவுவது கட்டாயமாகிறது. சோப் உள்ளிட்டவற்றைவிட இதற்கென தயாரிக்கப்பட்ட பாக்டீரியா, வைரஸ், தொற்றுநோய் கிருமிகளை கொல்லும் திறன் கொண்ட கை கழுவும் திரவங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.

பொதுவாக இப்போது புழக்கத்தில் உள்ள கை கழுவும் திரவ பாட்டில்களை வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதில் மிகவும் சிரமம் உள்ளது. அதைப் போக்கும் வகையில் டச்லேண்ட் நிறுவனம் புதிய வகை ஸ்பிரேயை அதுவும் கையடக்க வடிவில் உருவாக்கியுள்ளது.

இதை மிக எளிதாக எடுத்துச் செல்ல முடியும். ஒரு பாட்டில் ஏறக்குறைய 500 முறை பயன்படுத்த முடியும். இதில் உள்ள திரவம் எளிதில் கசியாத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஹேண்ட் ஸ்பிரே விரைவிலேயே பிற நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளது.

ஸ்பிரே என்பதால் இது கையில் எண்ணெய் பிசுக்காக ஒட்டிக் கொண்டிருக்காது. மேலும் ஆல்கஹால் நெடி இதில் இருக்காது. கைகளில் உள்ள கிருமிகளைக் கொல்லும், அதேசமயம் நல்ல நறுமணத்தையும் அளிக்கும். 

மேலும் செய்திகள்