பஸ் டெப்போவில் பணத்தை வீசி நடனம் மராத்தி நடிகை உள்பட 7 ஊழியர்கள் பணி நீக்கம் பெஸ்ட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

பஸ் டெப்போவில் பணத்தை வீசி நடனம் ஆடிய மராத்தி நடிகை உள்பட 7 ஊழியர்களை பணி நீக்கம் செய்து பெஸ்ட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

Update: 2018-08-28 23:00 GMT
மும்பை, 

பஸ் டெப்போவில் பணத்தை வீசி நடனம் ஆடிய மராத்தி நடிகை உள்பட 7 ஊழியர்களை பணி நீக்கம் செய்து பெஸ்ட் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

பணத்தை வீசி நடனம்

மும்பை வடலாவில் உள்ள பெஸ்ட் பஸ் டெப்போவில் கடந்த ஆண்டு நடந்த தசரா கொண்டாட்டத்தின் போது ஊழியர்கள் பணத்தை வீசி நடனமாடினர். இந்த காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி 3 நபர் கமிட்டி விசாரணை நடத்தியது.

இதில், பணத்தை வீசி நடனமாடிய பெஸ்ட் ஊழியரும், மராத்தி நடிகையுமான மாதவி ஜூவேக்கர் உள்ளிட்ட 7 பேரை பணிநீக்கம் செய்ய அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.

தீர்ப்பாயத்தை அணுக முடிவு

இதையடுத்து பெஸ்ட் நிர்வாகம் மராத்தி நடிகை உள்பட ஊழியர்கள் 7 பேரையும் அதிரடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

பெஸ்ட் நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பெரும்பாலான ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர்கள் சிறுவர்கள் வைத்து விளையாடும் ரூபாய் நோட்டுகளை வீசி நடனமாடியதற்காக ஊழியர்களை பணி நீக்கம் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறுகின்றனர். மேலும் அவர்கள் நிர்வாகத்தின் முடிவிற்கு எதிராக தீர்ப் பாயத்தை அணுக முடிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்