நாமக்கல்லில் கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Update: 2018-08-28 22:45 GMT

நாமக்கல்,

கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். பொங்கல் போனஸ் நாட்கள் கணக்கில் வழங்கிட வேண்டும். ஜமாபந்திக்கு படி வழங்க வேண்டும். இயற்கை இடர்பாட்டிற்கு சிறப்பு படி வழங்கவேண்டும். கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு 30 சதவீதமாக உயர்த்தியும், 10 ஆண்டுகள் என்பதை 6 ஆண்டுகளாக குறைத்தும் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு பழைய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். இதில் வட்ட தலைவர் சுப்பிரமணி, செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்