காதலியை மீட்டு தரக்கோரி செந்துறை போலீஸ் நிலையத்தை காதலன்– உறவினர்கள் முற்றுகை

காதலியை மீட்டு தரக்கோரி செந்துறை போலீஸ் நிலையத்தை காதலன்–உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2018-08-28 22:30 GMT
செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பெரியாகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மகன் கார்த்திகேயன். என்ஜீனியரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே ஊர் சேர்ந்த ஒரு பெண்ணை 10 வகுப்பு படிக்கும் போது இருந்து காதலித்து வந்தார். இந்நிலையில் இருவீட்டாரும் திருமணத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்த நிலையில், திடீரென அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபருக்கும் நிச்சயம் செய்ததாக தெரிந்தது.


இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் செந்துறை போலீஸ் நிலையத்தில் தனது காதலியின் விருப்பம் இல்லாமல் வேறு நபருக்கு திருமணம் செய்ய அவர்களது பெற்றோர் முயற்சி செய்கின்றனர். எனவே அவரை மீட்டு தரவேண்டும் என்று புகார் அளித்துள்ளார். புகாரை செந்துறை போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டு விசாரணையை தள்ளிவைத்துக்கொண்டு சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு செந்துறை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து கார்த்திகேயன் உறவினர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் செந்துறை மெயன்ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்