துணை ராணுவத்தில் 390 பணியிடங்கள்

இந்திய திபெத்திய எல்லைக்காவல் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-

Update: 2018-08-28 07:18 GMT
இந்திய ராணுவத்தின் துணை ராணுவ படைப்பிரிவுகளில் ஒன்று ஐ.டி.பீ.பி. இந்திய திபெத்திய எல்லைக் காவல் படையான இந்த அமைப்பில் தற்போது சப்-இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள், கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 390 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 17 இடங்களும், ெஹட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு 155 பேரும், கான்ஸ்டபிள் பணிக்கு 218 இடங்களும் உள்ளன. இவை டெலிகாம் பிரிவு பணிகளாகும். இவற்றில் பெண்களுக்கும் கணிசமான இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு ரூ.200-ம், மற்ற பணிகளுக்கு ரூ.100-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு 4-9-2018-ந் தேதி தொடங்குகிறது. இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க 31-10-2018-ந் தேதி கடைசி நாளாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம். 

மேலும் செய்திகள்