சோழவந்தான் அருகே பாசன கால்வாய் நீரில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
மதுரை சோழவந்தான் அருகே பாசன கால்வாயில் மோட்டார்சைக்கிள் பாய்ந்ததில் நீரில் மூழ்கிய சிறுவனின் உடலை கிராமமக்கள் மீட்டனர்.
சோழவந்தான்,
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் மம்முட்டிபட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 35). இவருடைய மனைவி சத்யா, மகன் கிருத்திக் ராஜா (4). இவர்கள் 3 பேரும் வைத்தான்பட்டியில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது பாசன கால்வாய் ஓர சாலையில் வந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் தண்ணீரில் 3 பேரும் மூழ்கினர். அப்போது விஜயகுமார், சத்யா ஆகியோர் மீட்கப்பட்டனர். சிறுவன் கிருத்திக்ராஜா தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டான். சிறுவனின் கதி என்னவென்று தெரிய£த நிலையில் கிராமமக்கள் தொடர்ந்து அவனை தேடிவந்தனர்.
இந்நிலையில் அய்யனார்குளம் கண்மாய் மடை பாலத்தில் நேற்று சிறுவனின் உடலை கிராமமக்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி கிராமமக்களை சோகத்தில் ஆழ்த்திஉள்ளது.