விசைப்படகு மீது கப்பல் மோதல்: மாயமான 7 பேரை இறந்தவர்களாக கருதி நிவாரண தொகை வழங்க கோரிக்கை
கேரளாவில் விசைப்படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 7 பேரை இறந்தவர்களாக கருதி நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் மனு கொடுத்தார்.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடந்தது. முகாமில், மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கினார். அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெவ்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதேபோல் நாகர்கோவில் கோட்டார் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட அமைப்புகளில் ஒன்றான கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி அமைப்பின் இயக்குனர் அருட்பணியாளர் ஸ்டீபன் தலைமையில், குறும்பனை பெர்லின் உள்பட பலர் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–
கேரள மாநிலம் முனம்பம் பகுதியில் இருந்து கடந்த 6–ந் தேதி ஓசானிக் என்ற விசைப்படகில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 11 பேரும், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவரும், வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரும் மீன்பிடிக்க சென்றார்கள். மறுநாளான 7–ந் தேதி அதிகாலை 2.30 மணிக்கு அவர்களது விசைப்படகு மீது கப்பல் மோதியதில் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில் ராமன்துறையை சேர்ந்த பாக்கோபு, யுகநாதன், முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ் ஆகிய 3 பேர் இறந்தனர். இவர்களது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
கேரள மாநிலத்தை சேர்ந்தவரின் உடல் 11–ந் தேதி கிடைத்தது. ராமன்துறையை சேர்ந்த சேசுபாலனின் உடல் 13–ந் தேதி கிடைக்கப் பெற்றது. மேலும் ராமன்துறையை சேர்ந்த எட்வின், வடமாநிலத்தை சேர்ந்த நரேன் ஆகியோர் உயிரோடு மீட்கப்பெற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ராமன்துறையை சேர்ந்த ராஜேஷ்குமார், ஆரோக்கிய தினேஷ், ஷாலு, முள்ளூர்துறையை சேர்ந்த சகாயராஜ், கீழமணக்குடியை சேர்ந்த பால்சன் மரியராஜ், அருள்குமார் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் மாயமான 7 பேரின் உடல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. எனவே மேற்கூறிய குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுகின்றன.
இவர்களின் பரிதாப நிலையை கருத்தில் கொண்டு, ஒகி புயலால் காணாமல் போனவர்களை இறந்தவர்களாக உடனே அறிவித்ததுபோல், இந்த விபத்திலும் மாயமான 7 மீனவர்களையும், இறந்தவர்களாக அறிவித்து அனைவருக்கும் தலா ரூ.20 லட்சம் நிவாரண தொகையும், அவரவர் தகுதிக்கேற்ப குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் வழுக்கம்பாறை அருகே உள்ள பல்பனாபன்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “குலசேகரபுரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட கல்வெட்டான்குழி குளம் அருகில் 20 ஆண்டுகளாக குடியிருந்து வருவோர் குடியிருப்புகளை 3 நாட்களுக்குள் காலிசெய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வீடுகளினால் அரசுக்கோ, விவசாயத்துக்கோ எந்த இடையூறும் இல்லை. எனவே குடியிருப்புகளை பாதுகாக்க வேண்டும்“ என்று கூறியுள்ளனர்.
இதேபோல் வேர்கிளம்பி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜெயமனோகரன் மற்றும் கவுன்சிலர்கள் கொடுத்துள்ள மனுவில், “ வேர்கிளம்பி பகுதியில் அப்புறப்படுத்தப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை மீண்டும் திறக்க முயற்சிப்பதை தடை செய்ய வேண்டும்“ என்று கூறியிருந்தனர்.
மருங்கூர் அருகே உள்ள அமராவதிவிளையை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “எங்கள் ஊரை இணைக்கின்ற மருங்கூர்– அமராவதிவிளை இணைப்புச்சாலை மிகவும் மோசமாகி பழுதடைந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை சரிசெய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இணைப்புச்சாலையை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்“ எனக்கூறியுள்ளனர்.