மானூர் அருகே தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

மானூர் அருகே, தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-26 22:00 GMT
மானூர், 

மானூர் அருகே உள்ள உகந்தான்பட்டியை சேர்ந்தவர் இசக்கிப்பாண்டி (வயது 50). கூலி தொழிலாளி. அவருடைய மனைவி வேலம்மாள் (46). 25 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை. இவர்கள் தற்போது சேரன்மாதேவி அருகே உள்ள கூனியூரில் வசித்து வருகின்றனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலம்மாள், மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளத்தில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று இருந்தார். இசக்கிப்பாண்டியும் கடந்த வாரம் மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு வலியுடன் இருந்து வந்துள்ளார். இதனால் மனைவியை பார்க்க இசக்கிப்பாண்டி மேலப்பிள்ளையார்குளத்துக்கு வந்துள்ளார். அவரிடம் செலவுக்கு பணம் வாங்கிக் கொண்டு கூனியூருக்கு புறப்பட்டுள்ளார்.

ஆனால் கால்வலி அதிகமாகவே மீண்டும் மேலப்பிள்ளையார்குளத்துக்கு சென்றார். அங்கு உறவினர் திருமணத்துக்கு மனைவி சென்று விட்டதால் அவரை பார்க்க முடியவில்லை. கால்வலி அதிகமானதால் தன்னை கவனிக்க யாரும் இல்லை என மனவேதனை அடைந்த இசக்கிப்பாண்டி, அங்குள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாதநேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். இசக்கிப்பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சப்-இன்ஸ்பெக் டர் கணேஷ்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்