திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஊரக வளர்ச்சித்துறையினர் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் பொங்கலூரில் நடைபெற்றது.

Update: 2018-08-26 22:45 GMT

பொங்கலூர்,

உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் இல்லாத போதும், அரசு நிதி ஒதுக்காத போதும் பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை ஊராட்சி செயலர்கள் சிரமப்பட்டு சமாளித்து வருகிறார்கள். மேலும் ஊராட்சி செயலர்கள் முதல் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் வரை அலுவலகத்தில் இரவு–பகல் பார்க்காமல் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பல ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணியிடம் நீக்கம், வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் என்று பல்வேறு நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அனைத்து ஊழியர்கள் மத்தியில் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.

எனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சி செயலர்களுக்கு மீண்டும் பணி வழங்கவும், பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர்களை மீண்டும் பழைய இடத்திற்கே மாற்றவேண்டும். திட்ட செயலாக்கத்தில் கடுமையான நெருக்கடிகளை தவிர்க்கவும் கோரி 27–ந் தேதி (இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் திரளாக கலந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் செய்திகள்