பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, சணல், காகித பைகளை பயன்படுத்த வேண்டும் கலெக்டர் பேச்சு
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, சணல், காகித பைகளை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் கணேஷ் கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை புதுக்குளத்தில்் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் “பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை“ என்ற பிரசாரத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கணேஷ் கலந்து கொண்டு பிரசாரத்தினை தொடங்கி வைத்தார். இதில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அப்போது கலெக்டர் கணேஷ் கூறியதாவது:-
வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடைசெய்யப்பட உள்ளது என முதல்-அமைச்சர் அறிவித்து உள்ளார். அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் கடந்த ஜூலை மாதம் 15-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடற்ற வளாகங்களாக மாற்றப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடையே பிளாஸ்டிக்கின் தீமை குறித்தும் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணி, சணல், காகித பைகளை பயன்படுத்த வேண்டும். இதன்மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தை பிளாஸ்டிக் மாசில்லா மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து புதுக்குளத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வக்குமார், உதவி பொறியாளர் ராஜராஜேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.