கூலிப்படையை வைத்து பழி தீர்த்த சம்பவம்: காங்கிரஸ் பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்
காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் கொலையில் கைதான முக்கிய குற்றவாளி போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அன்றைய தினம் அவர் சாவில் இருந்து தப்பி இருக்கவே முடியாது என போலீசில் அவர் தெரிவித்துள்ளார்.
வானூர்,
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 42). காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவராக இருந்து வந்தார். தனியார் நிறுவனங்களில் குத்தகை பணிகளை எடுத்து செய்து வந்தார். கடந்த 30-ந் தேதி காலாப்பட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த போது வழிமறித்து வெட்டி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் குத்தகை பணி செய்வதில் ஏற்பட்ட தொழில்போட்டி காரணமாக முன்விரோதத்தில் கூலிப்படை வைத்து ஜோசப் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், செல்வ குமார், பார்த்திபன் உள்பட 6 பேரை கைது செய்தனர்.
இந்த கொலைதொடர்பாக போலீசாரால் தேடப்பட்டு வந்த பிள்ளைச்சாவடி சங்கர் கணேஷ், கருவடிக்குப்பத்தை சேர்ந்த சாண்டில்யன் ஆகியோர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இவர்களில் சங்கர்கணேசை ஏற்கனவே காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதன் தொடர்ச்சியாக சாண்டில்யனை போலீசார் நேற்று முன்தினம் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.
ஜோசப் கொலையில் முக்கிய குற்றவாளியான சாண்டில்யன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சிறு வயதில் இருந்தே சங்கர்கணேஷ் எனக்கு நண்பர். அதேபோல் தாதா மணிகண்டனும் நெருங்கிய நண்பர். நாங்கள் அடிக்கடி சந்தித்து பேசி வந்தோம். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது எங்களுக்கு எதிராக இருக்கும் தொழில் அதிபர் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்வது என்று அப்போது முடிவு செய்தோம்.
இந்த சம்பவத்தை நிறைவேற்ற தேவையான உதவிகளை செய்வதாக சங்கர் கணேஷ் உறுதி அளித்தார். அதற்கு கைமாறாக காங்கிரஸ் பிரமுகரான காலாப்பட்டு ஜோசப்பை கொலை செய்ய வேண்டும் என்று எங்களிடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். ரிலையன்ஸ் பாபு, காலாப்பட்டு ஜோசப் ஆகிய இருவரையும் அடுத்தடுத்து கொலை செய்வது என்று திட்டமிட்டோம். அதைத்தொடர்ந்து ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்ய ஒரு அணியும், ஜோசப்பை கொலை செய்ய மற்றொரு அணியும் தயார் செய்யப்பட்டது.
திட்டமிட்டபடி முதலில் ரிலையன்ஸ் பாபுவை கொலை செய்தோம். அந்த கொலைக்கு சங்கர் கணேஷ் தன்னுடைய காரை கொடுத்து உதவி செய்தார். மேலும் பணம் மற்றும் ஆட்கள் உதவியும் செய்தார். அந்த கொலையை முடித்ததும் அடுத்து ஜோசப்பை கொலை செய்வதற்கு தயாரானோம்.
இதற்காக சுமார் ஒரு வார காலமாக ஜோசப்பின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தோம். அவரை கொலை செய்ய கடலூர், அரியாங்குப்பம், தட்டாஞ்சாவடி, குயிலாப்பாளையம் ஆகிய இடங்களில் இருந்து 4 கூலிப்படைகளை ஏற்பாடு செய்தோம்.
இந்தநிலையில் ரிலையன்ஸ் பாபு கொலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி எங்களை கைது செய்வதற்கு நெருங்கினர். போலீசார் எங்களை கைது செய்தால் சிக்கல் ஆகிவிடும் என்பதால் ஜோசப்பை கொலை செய்யும் திட்டத்தை தீவிரப்படுத்தினோம். அவரை எப்படியாவது கொலை செய்துவிடுவது என்பதற்காக அவருடைய வீடு அருகில் இருந்து அடிக்கடி அவர் செல்லும் இடங்களில் நின்று ஆங்காங்கே எங்கள் ஆட்கள் கண்காணித்தனர்.
இறுதியாக கடந்த 30-ந் தேதி ஜோசப்பை கொலை செய்வது என முடிவு செய்து அதற்கு தயாரானோம். அவர் காரில் வந்தாலும் சரி, மோட்டார் சைக்கிளில் வந்தாலும் சரி எப்படியாவது அவரை கொலை செய்வது என்று முடிவு செய்திருந்தோம்.
அன்றை தினம் மதியம் அவர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். எங்கள் ஆட்கள் மூலம் இந்த தகவல் தெரியவந்தது. உடனே நாங்கள் தயாரனோம். புதுச்சேரி பல்கலைக்கழகம் அருகே ஜோசப் வந்தபோது அவரை கொலை செய்ய முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி பலிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து அவரை நானும் (சாண்டில்யன்), மைக்கேல் ஏழுமலை என்பவரும் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றோம். பெரியமுதலியார் சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் அவர் மீது மோதுவது போல் மைக்கேல் ஏழுமலை நெருக்கமாக ஓட்டிச்சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்னால் உட்கார்ந்திருந்த நான் வீச்சாரிவாளை எடுத்து ஜோசப்பை வெட்டினேன். ஒரே வெட்டில் ஜோசப் கீழே விழுந்தார். அதன்பிறகு நாங்கள் தப்பிச்சென்றுவிட்டோம்.
அங்கு வைத்து நாங்கள் வெட்டவில்லை என்றாலும் அடுத்து வழியில் பல இடங்களில் எங்கள் ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் நிச்சயமாக ஜோசப்பை வெட்டி கொலை செய்திருப்பார்கள். எந்த நேரத்திலும் அவர் தப்பி விடக் கூடாது என்ற வகையில் ஒரு இடத்தில் இல்லை என்றால் மற்றொரு இடத்தில் கொலை சம்பவத்தை அரங்கேற்றுவது என முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தோம். எனவே அவர் அன்றைய தினம் ஜோசப் சாவில் இருந்து தப்பி இருக்கவே முடியாது.
இவ்வாறு சாண்டில்யன் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து போலீசார் சாண்டில்யனிடம் போலீசார் விசாரித்தனர். ஜோசப்பை கொலை செய்ய தூண்டியவர்கள் யார்? யார்? எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்பது பற்றி தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று தெரிகிறது.
மேலும் இந்த கொலையில் அரியாங்குப்பத்தை சேர்ந்த செய்யாறு, கருவடிக்குப்பத்தை சேர்ந்த மோகனசுந்தரம், ரவுடி சித்தரஞ்சன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
சம்பவம் நடந்தது முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருநம் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே ஜோசப்பை கொலை செய்தபோது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மைக்கேல் ஏழுமலையை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் கோர்ட்டில் சரண் அடையலாம் என போலீசார் கருதுகிறார்கள். அதற்கு முன்பாகவே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.