கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நவீன செயற்கை உறுப்புகள் பொருத்த விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராமன் தகவல்

கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நவீன செயற்கை உறுப்புகள் பொருத்த விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-24 23:12 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நவீன செயற்கை உறுப்புகள் பொருத்த விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம், முதல் - அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் கை முட்டிக்கு கீழ், முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்ட மற்றும் கால் முட்டிக்கு கீழ், முட்டிக்கு மேல் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன செயற்கை உறுப்புகள் பொருத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே நவீன செயற்கை உறுப்புகள் பொருத்த விருப்பம் உள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் அட்டை நகல், 2 புகைப்படம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வேலூர் அண்ணாசாலையில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பித்து பதிவு செய்து, நவீன செயற்கை உறுப்புகளை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்