திராகவத்தை குடித்து பெண் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே திராகவத்தை குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள கீழ்வாலை கிராமத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவரது மனைவி பஞ்சாலை(வயது 26). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பஞ்சாலை தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, திடீரென திராகவத்தை எடுத்து குடித்து விட்டார்.
இதில் வலியால் அலறித்துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை பஞ்சாலை உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்நலக்கோளாறு காரணமாக பஞ்சாலை திராகவத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என விசாரித்து வருகிறார்கள்.ள