சென்னை தொழில் அதிபரை கடத்திய வழக்கு: 3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
செங்குன்றத்தில் ரூ.25 லட்சம் கேட்டு தொழில் அதிபரை கடத்திய வழக்கில் கைதான 3 ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
செங்குன்றம்,
சென்னையை அடுத்த செங்குன்றம் கரிகாலன்நகர் மூவேந்தர் தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(வயது 53). தொழில் அதிபர். இவரை கடந்த ஜூலை மாதம் 3–ந்தேதி பிரபல ரவுடி சக்தி என்கிற வடகரைசக்தி(49) மற்றும் அவரது கூட்டாளிகளான ரவுடிகள் 6 பேர் போலீஸ் போல் வேடமணிந்து ரூ.25 லட்சம் கேட்டு கடத்தி சென்றனர்.
இதுபற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் கணேசனை மீட்டதுடன், சக்தி மற்றும் அவரது கூட்டாளிகள் 6 பேரை உடனடியாக கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர். இதில் சக்தி மீது செங்குன்றம், சோழவரம், மாதவரம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி என 18 வழக்குகள் உள்ளன.
இவரது கூட்டாளிகளான சிவா(48) மீது சோழவரம், செங்குன்றம், புழல் போலீஸ் நிலையங்களில் கொலைமுயற்சி, வழிப்பறி உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன.
மேலும் மற்றொரு கூட்டாளி சுமன் (45) மீது செங்குன்றம், சோழவரம், திருப்பத்தூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் இரட்டைக்கொலை, வழிப்பறி உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் என புழல் போலீஸ் உதவி கமிஷனர் பிரபாகர் மற்றும் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்தனர்.
பரிந்துரையை ஏற்ற கமிஷனர், சக்தி என்கிற வடகரைசக்தி, சிவா, சுமன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர்.