தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் கேரள மக்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கேரளாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள்.

Update: 2018-08-23 22:45 GMT

தர்மபுரி,

கேரளாவில் கடும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள அரிசி, உணவு பொருட்கள், துணிகள், போர்வைகள், பாத்திரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த பொருட்கள் லாரி மூலம் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு நிவாரண பொருட்கள் சென்ற லாரியை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர்கள் ஜனகராஜ், காமராஜ், வேலன், விஸ்வநாதன், பூபதி ராஜா, வேடியப்பன், நிர்வாகிகள் கக்கன், மோகன்குமார், சிவலிங்கம், முத்து உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்