உண்டியலில் சேமித்த பணத்தில் நிவாரண பொருட்கள் வாங்கி கொடுத்த சிறுமி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நிவாரண பொருட்களை சேகரித்தனர்.
கோவில்பட்டி,
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு உதவிடும் வகையில், கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நிவாரண பொருட்களை சேகரித்தனர். மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான அரிசி, பருப்பு, பிஸ்கட், ரஸ்க், துணிகள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களும், ரூ.42 ஆயிரமும் சேகரிக்கப்பட்டது.
கோவில்பட்டி முத்தையாமால் தெருவைச் சேர்ந்த சட்டமுத்து மகள் மீனஹாசினி (வயது 9), கடந்த 6 மாதமாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.1,500–ஐ கொண்டு பிஸ்கட், ரஸ்க் பண்டல்கள் வாங்கி கொடுத்தார்.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு லாரியில் கொண்டு சென்றனர். பின்னர் அவற்றை அங்கிருந்து கேரள மாநிலத்துக்கு கொண்டு சென்று, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.