படை பணியில் சேர முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் படைப்பணியில் சேர ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-08-23 21:00 GMT
தூத்துக்குடி, 

முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் படைப்பணியில் சேர ஆன்லைன் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–

ஆன்லைன் பயிற்சி

முன்னாள் படைவீரர் நல இயக்ககம் மூலம் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் படைப்பணியில் அலுவலராக நியமனம் பெறுவதை ஊக்குவிப்பதற்காக இணையதளம் மூலம் ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

பட்டய படிப்பு முடித்த முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி 6 மாதம் வழங்கப்படும். அவரவர் இருப்பிடத்தில் இருந்தே இந்த பயிற்சியில் பங்கு பெறலாம். ஒவ்வொரு வார இறுதியிலும் பொது அறிவு, ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு பாடப்பகுதி முன்னரே அறிவிக்கப்பட்டு மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு...

எனவே தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தகுதியான சிறார்கள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் சிறார்களுக்கு லாகின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு தனித்தனியாக அளிக்கப்பட்டு அவர்களுடைய முன்னேற்றம் தகுதி படைத்த கல்வியாளர்களால் கூர்மையாக கண்காணிக்கப்பட்டு தேவைப்படும் வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்கங்கள் அளிக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் 10 நாட்கள் முன்னாள் படைவீரர் நல இயக்ககத்தில் நேரடி பயிற்சி வகுப்பும் நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 0461–2321678 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்