இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டரிடம் உறவினர்கள் மனு

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

Update: 2018-08-23 21:30 GMT
தூத்துக்குடி, 

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளனர்.

மீனவர்கள் சிறைபிடிப்பு 

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த அந்தோணி, ரூபின்ஸ்டன், வில்பிரட், விஜய், ரமேஷ், ஆரோக்கியம், கோரத்த முனியன், இசக்கிமுத்து ஆகிய 8 மீனவர்கள் கடந்த 21–ந்தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர்.

இந்த நிலையில் அந்த மீனவர்களின் உறவினர்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறிஇருப்பதாவது:–

நடவடிக்கை 

தூத்துக்குடியில் இருந்து திரேஸ்புரத்தை சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த 19–ந்தேதி மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் பாம்பன் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல்மைல் தொலைவில் இந்திய கடல் பரப்பில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.

கடந்த 21–ந்தேதி காலையில் இந்திய எல்லைக்குள் வந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டு இருந்த 8 மீனவர்களையும் சிறைபிடித்து படகையும் பறிமுதல் செய்து உள்ளனர். எனவே மீனவர்கள் 8 பேரையும், மீன்பிடி படகையும் பத்திரமாக மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்