சைபீரியாவின் மர்மப் பள்ளங்கள்!

ரஷியாவின் சைபீரியா பகுதியில் மர்மப் பள்ளங்கள் அதிகரித்து வருகின்றன.

Update: 2018-08-23 21:30 GMT
2013-ம் ஆண்டு ஹெலிகாப்டரில் பயணித்த பைலட்டுகள் யாமல் பகுதியில் மர்மப் பள்ளங்களைக் கண்டுபிடித்தனர். சில நாட்களில் மேலும் சில பள்ளங்கள் தென்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ராட்சத பள்ளம் ஒன்றும் அதைச் சுற்றிலும் ஏராளமான சிறிய பள்ளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. சில பள்ளங்கள் ஏரிகளாக மாறிவிட்டன. இன்னும் 30 பள்ளங்களாவது இந்தப் பகுதியில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் புவியியல் ஆராய்ச்சியாளர்கள். நிரந்தர பனிப்பிரதேசங்கள் பூமி வெப்பம் அடைவதால் உருகி வருகின்றன. அவற்றின் உள்ளே இருக்கும் மீத்தேன் வாயு வெடித்து வெளியே வரும்போது இதுபோன்ற பள்ளங்கள் ஏற்படுவதாக சில நிபுணர்கள் சொல்கிறார்கள். இதை சில விஞ்ஞானிகள் மறுக்கிறார்கள். பல்வேறு ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இன்னும் இந்த பள்ளங்கள் ஏன் உருவாகின்றன என்பதற்கு சரியான விளக்கம் கிடைக்காமல் திண்டாடி வருகிறார்கள். ஆனால் இது மிக முக்கியமான பிரச்சினை. விரைவில் ஆராய்ந்து, உலகத்துக்கு ஏற்பட இருக்கும் இயற்கை பேரழிவில் இருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என்கிறார் மாஸ்கோவின் ஆராய்ச்சியாளர் வசில் போகோயவ்லென்ஸ்கி.

மேலும் செய்திகள்