மோட்டார்சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதல்: வங்கி தேர்வு எழுத சென்ற என்ஜினீயர் பலி

திருவொற்றியூர் அருகே வங்கி தேர்வு எழுத மோட்டார் சைக்கிளில் சென்ற என்ஜினீயர் டேங்கர் லாரி மோதி பலியானார்.

Update: 2018-08-22 23:45 GMT
திருவொற்றியூர்,

திருவொற்றியூர் சாத்துமா நகரில் வசித்து வருபவர் மகேந்திரன். அதே பகுதியில் பால் கடை வைத்து உள்ளார். இவரது மகன் மதன்குமார் (வயது 21). என்ஜினீயரிங் முடித்துள்ள இவர் வேலை தேடி வந்தார்.

நேற்று காலை வங்கி தேர்வு எழுதுவதற்காக பரங்கிமலைக்கு மோட்டார்சைக்கிளில் புறப்பட்டார். திருவொற்றியூர் டோல்கேட் அருகே எஸ்.என்.செட்டி சாலையில் சென்றபோது வேகமாக வந்த டேங்கர் லாரி மதன்குமார் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் மதன்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டேங்கர் லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்