சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டன் நியமனம்
பிரபல இந்தி நடிகையான ரவீனா தாண்டனை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பர தூதராக மராட்டிய அரசு நியமித்து உள்ளது.
மும்பை,
மும்பை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்த தகவலை நேற்று மந்திரி சுதிர் முங்கண்டிவார் வெளியிட்டார். மேலும் அவர் கூறியதாவது:-
சஞ்சய் காந்தி தேசிய பூங்காவின் விளம்பர தூதராக நடிகை ரவீனா தாண்டனை நியமித்து இருப்பதை நான் வரவேற்கிறேன். அவர் சுற்றுப்புற சூழல் மீது அதிக அக்கறை கொண்ட ஒரு குடிமகள் மட்டுமல்லாது சமுதாயத்தில் மரியாதைக்குரியவரும் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சஞ்சய் காந்தி பூங்காவின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டது குறித்து ரவீனா தாண்டன் கூறுகையில், “நான் குழந்தைகளுடன் பலமுறை சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு சென்றுள்ளேன். தற்போது என்னை அந்த பூங்காவின் விளம்பர தூதராக நியமிக்க இருப்பதை பெருமையாக கருதுகிறேன்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். மந்திரி சுதிர் முங்கண்டிவாருடனும், வனத்துறையினருடனும் இணைந்து பசுமையான மும்பையை உருவாக்க அனைத்்து முயற்சிகளையும் எடுப்பேன்” என்றார்.
புதிய விளம்பர தூதரான ரவீனா தாண்டனை வரவேற்கும் நிகழ்ச்சி அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் நடக்கிறது. மேலும் அவர் தேசிய பூங்காவிற்கான புதிய இணையதளத்தையும் தொடங்கி வைக்கிறார்.