நர்சிங் படிக்க முடியாத விரக்தியில் கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை

நர்சிங் படிப்பு படிக்க முடியாத விரக்தியில் கல்லூரி மாணவி, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-08-22 22:34 GMT
விழுப்புரம், 


வானூர் தாலுகா பொம்மையார்பாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் முருகன் மகள் காயத்ரி (வயது 18). இவர் குயிலாப்பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் கலை கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் தனது பெற்றோரிடம் பி.எஸ்சி. நர்சிங் படிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை கூறியிருந்தார். ஆனால் போதிய பண வசதி இல்லாததால் நர்சிங் படிக்க வைக்க முடியவில்லை. இதனால் தன்னால் நர்சிங் படிக்க முடியவில்லையே என்று காயத்திரி மனவிரக்தியில் காணப்பட்டார்.

இந்நிலையில் சம்பவத்தன்று மனவேதனை அடைந்த காயத்ரி, தன் மீது மண்எண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்