‘நேரம் வரும்போது எனது மனக்குமுறலை வெளிப்படுத்துவேன்’ - மு.க.அழகிரி பேட்டி

‘‘நேரம் வரும்போது எனது மனக்குமுறலை வெளிப்படுத்துவேன்’’ என்று மு.க.அழகிரி கூறினார்.

Update: 2018-08-23 00:00 GMT

மதுரை,

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது–

தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி சென்னையில் வருகிற 5–ந் தேதி அமைதி பேரணி நடக்கிறது. இந்த பேரணியை அண்ணாசாலையில் நடத்த அனுமதி கேட்டுள்ளோம். ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக போலீசார் அனுமதி தருவதாக தெரியவில்லை.

திருவல்லிக்கேணியில் பேரணி நடத்த அனுமதி தர வாய்ப்புள்ளது. இந்த பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள்.

என்னை தி.மு.க.வில் சேர்த்துக்கொள்வது போல் தெரியவில்லை. எனது மனக்குமுறலை மக்களிடம் எப்போது கூற வேண்டும் என அப்பா கூறுகிறாரோ, அப்போது மக்களிடம் கூறுவேன். எனது மனக்குமுறல் நேரம் வரும் போது வெளிப்படும்.

5–ந்தேதி நடைபெறும் அமைதி பேரணிக்கு பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்