குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் முத்தரசன் குற்றச்சாட்டு
குடிமராமத்து பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் தவறான முறையில் கையாடல் செய்யப்பட்டுள்ளது என முத்தரசன் குற்றம்சாட்டினார்.
தஞ்சாவூர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடிமராமத்து பணிக்காக கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடியும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3,853 ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளதாக தமிழகஅரசு அறிவித்துள்ளது. நீர்வள-நிலவள திட்டத்தின் கீழ் ரூ.3008 கோடியும், பருவநிலை மாற்றுத்திட்டத்தின் கீழ் ரூ.215 கோடியும், அணைகளை புனரமைக்க ரூ.360 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குடிமராமத்து பணிக்காக ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டது.
கர்நாடகத்தில் பெய்த கனமழையின் காரணமாக தமிழகத்தில் பெரிய ஆறுகளில் எல்லாம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு 1 மாதம் ஆகியும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. முறையாக தூர்வாரப்படாததால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக வறட்சியால் சாகுபடி செய்ய முடியாத நிலை இருந்தது.
ஆனால் இந்த ஆண்டு ஆறுகளில் இவ்வளவு தண்ணீர் ஓடியும் கடைமடைக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்றால் பாலைவனமாகிவிடும். கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டது என முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், விவசாயத்துறை அமைச்சர் தொடர்ந்து கூறி வருகின்றனர். குடிமராமத்து பணிக்காக தமிழகஅரசால் ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. தவறான முறையில் நிதி கையாடல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுவிசாரணை நடத்தப்பட வேண்டும். குடிமராமத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி எப்படி செலவு செய்யப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாத காரணத்தினால் போராட வேண்டிய நிர்பந்தத்திற்கு விவசாயிகள் ஆளாகியுள்ளனர். கடைமடைக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க கோரி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நாளை(வெள்ளிக்கிழமை) பல்வேறு கட்சிகள், விவசாயிகள் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
வருகிற 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு போராட்டமும், திருவாரூரில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டமும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாவட்ட செயலாளர் பாரதி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், நகர செயலாளர் மதியழகன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.