வீடுகளை சுத்தம் செய்யும் ‘எந்திரன்’

நவீன உலகில் மனிதனின் வேலைப் பளுவைக் குறைப்பதில் எந்திர மனிதனின் (ரோபோக்களின்) பங்கு பெருகி வருகிறது.

Update: 2018-08-22 05:30 GMT
கடினமான பணிகளுக்கு மட்டுமின்றி இப்போது வீடுகளில் பயன்படுத்தக்கூடிய ரோபோக்களும் வந்துவிட்டன.

அந்த வரிசையில் வந்துள்ளது தான், வீடுகளை சுத்தப்படுத்தும் நவீன ரோபோ ‘ஐ ரோபோ 900 சீரிஸ்’. அனைத்து வகையான தரைத்தளங்களையும், தரை விரிப்புகளையும் இது சுத்தப்படுத்தும். தரையில் சிதறிக்கிடக்கும் மிக மெல்லிய செல்லப் பிராணிகளின் முடிகளைக்கூட இது சுத்தம் செய்து விடும்.

இதில் அதிக அழுக்கு உள்ள பகுதிகளை உணரும் ‘சென்சார்’ உள்ளது. இதனால் அழுக்கு அதிகம் உள்ள பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு சுத்தப்படுத்தும். அதேபோல குப்பைகளை உறிஞ்சும் பகுதியில் நூல், உரோமங்கள் எந்திரத்திற்குள் சிக்காத வகையிலான நுட்பமும் இதில் உள்ளது. இதனால் உறிஞ்சும் பகுதி அடைத்துக் கொள்ளும் பிரச்சினையும் இதில் ஏற்படாது. அறையின் முழு அளவையும் உணர்ந்து இது அனைத்து இடங்களுக்கும் நகர்ந்து சென்று சுத்தப்படுத்தும். குறிப்பாக மூலை முடுக்கெல்லாம் சென்று சுத்தப்படுத்திவிடும்.

இந்த ரோபோவை நீங்கள் எங்கிருந்தபடியும் செயல்படுத்தலாம். ஒரு வேளை கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்றுவிட்டு வீடு திரும்புகிறீர்கள். நீங்கள் வருவதற்கு முன்பு வீட்டை சுத்தப்படுத்த விரும்பினால், பயணத்தின்போதே இந்த ரோபோவுக்கு கட்டளையிட்டால் அது வீட்டை சுத்தப்படுத்திவிடும். வட்ட வடிவில் இருப்பதால் இது அனைத்து பகுதிகளுக்கும் எளிதில் செல்ல முடியும். இதை பத்திரமாக வைக்க அதிக இடம் தேவையில்லை. கட்டிலுக்குக் கீழ் பகுதியிலேயே இதை வைத்துவிடலாம்.

அமேசான் தளத்தில் இது விற்பனைக்கு வந்துள்ளது. ரூ. 64,900 விலையுள்ள இது சலுகை விலையில் 43,239 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்