கையடக்கமான ஏ.சி.

கையோடு எடுத்துச்செல்லும் போர்டபிள் ரக சிறிய ஏ.சி.

Update: 2018-08-22 05:22 GMT
ஏர்கண்டிஷனர் (ஏ.சி.) எனப்படும் குளிர்சாதன கருவி கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு வருடத்தில் பெரும்பாலும் வெயில் கொடுமை வாட்டி வதைக்கிறது. அலுவலகத்தில் ஏ.சி., வீட்டில் ஏ.சி. போட்டுவிடலாம், ஆனால் வெளியிடங்களுக்கு செல்லும் போது என்ன செய்வது?. இக்குறைபாட்டை போக்குவதற்காக வந்துள்ளது தான் கையோடு எடுத்துச்செல்லும் போர்டபிள் ரக சிறிய ஏ.சி.

பேட்டரியில் இயங்கும் இந்த ஏ.சி. செயல்படும் பகுதியில் 50 சதுர அடி வரை குளிர்ச்சி பரவச்செய்யும் திறன்கொண்டது. ‘புளூடூத்’ ஸ்பீக்கராகவும், போனை சார்ஜ் செய்யும் ‘பவர் பேங்க்’ ஆகவும் இதைப் பயன்படுத்தலாம். எல்.இ.டி. விளக்கு உள்ளதால் இரவு நேரத்தில் பேட்டரி விளக்காகவும் பயன்படும்.

இந்த கையடக்க ஏ.சி.யில் சக்திவாய்ந்த பேட்டரி இருப்பதால் சில மணிநேரம் வரை குளுகுளு வசதியை அனுபவிக்க முடியும். தி ஜீரோ பிரீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்த கையடக்க ஏ.சி.யின் விலை சுமார் 500 அமெரிக்க டாலர்கள்.

மேலும் செய்திகள்