வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லாமல் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதியை பள்ளிக்கூடங்களிலேயே பதிவு செய்யலாம் - கலெக்டர் எஸ்.பிரபாகர் தகவல்
மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு அலுவலகம் செல்லாமல் தங்கள் எஸ்.எஸ்.எல்.சி. கல்வி தகுதியை பள்ளிக்கூடங்களிலேயே பதிவு செய்யலாம் என்று கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 வகுப்பு முடித்த மாணவ-மாணவிகள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய அந்தந்த பள்ளிக்கூடங்களிலேயே வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த கல்வி ஆண்டு(2017-2018) எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் கடந்த 16-ந் தேதி முதல் அந்தந்த பள்ளிக்கூடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்ற மாணவ-மாணவிகள் தங்கள் கல்வி தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்ய ஏற்படும் காலவிரயத்தை தவிர்க்கவும், பதிவு செய்யாமல் விடுபட்டு விடுவதை தடுக்கவும் அந்தந்த பள்ளிக்கூடங்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு பதிவு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
வருகிற 30-ந் தேதிவரை இந்த வசதி அனைத்து பள்ளிக்கூடங்களிலும் இருக்கும். எனவே மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கல்வித்தகுதியை பதிவு செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவ-மாணவிகள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு துறையின் இணையதள முகவரியான https:tnv-e-l-a-iv-a-i-ppu.gov.in மூலம் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். அதில் சிரமம் இருப்பவர்கள் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்று தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்யலாம். வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஜாதி சான்றிதழ், எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவை அவசியமாகும். எனவே எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கல்வி தகுதியை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் எஸ்.பிரபாகர் கூறி உள்ளார்.