ரெயில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய 2 பேர் சிக்கினர் - 30 கிராம் நகை, செல்போன் பறிமுதல்
ஜோலார்பேட்டையில் ரெயில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய 2 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து 30 கிராம் நகை மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜோலார்பேட்டை,
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி மற்றும் போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார்.
அதையடுத்து அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்ததில் அதில் 30 கிராம் நகைகள், ஒரு செல்போன் இருந்தது. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, சரியான பதில் இல்லை. அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தங்கள் பாணியில் விசாரணை செய்தனர்.
அதில், அவர் ஆந்திர மாநிலம் திருச்சானூர் பகுதி, ரேணிகுண்டா ரோடு, ஆட்டோநகரை சேர்ந்த சேஷக்முகமது (வயது 56) என்பதும், ரெயில் பயணிகளான கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த அருணாஸ்ரீ, சென்னை திருநின்றவூரை சேர்ந்த ஒரு பெண் பயணி, திருப்பத்தூர் ஆசிரியர் நகரை சேர்ந்த கண்மணி ஆகியோரிடம் வெவ்வேறு நாட்களில் அவர்களின் 30 கிராம் நகை, ஒரு செல்போன் ஆகியவை திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 கிராம் நகை, ஒரு செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல காட்பாடி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகப்படும் படியாக நின்ற மத்திய பிரதேசத்தை சேர்ந்த உமாபதி என்பவரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர் ரெயில் பயணிகளிடம் கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.