ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலி பறித்த வாலிபர் கைது

ஆலங்குடி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-08-21 22:15 GMT

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள அரசடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் பிரபு. இவரது மனைவி மரியபிரேமா (வயது 26). இந்தநிலையில் ஸ்டீபன் பிரபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் மரியபிரேமா தனது மாமனார், மாமியாருடன் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் மரியபிரேமா தனியாக தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்மநபர் ஒருவர் மரியபிரேமா கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்தார். இதனால் திடுக்கிட்டு எழுந்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த மர்மநபர் தாலி சங்கிலியுடன் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

இது குறித்து மரியபிரேமா ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் புதுக்கோட்டை தெற்கு சந்தைப்பேட்டையை ரவிச்சந்திரன் (26). என்பவர் மரியபிரேமாவின், தாலி சங்கிலியை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்து, கோர்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்