அரசு ஊழியர் சங்கத்தினர் மனித சங்கிலி போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-21 22:45 GMT

புதுக்கோட்டை,

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கசாமி தலைமை தாங்கினார். இதில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணை தலைவர் தமிழ்மணி கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். படித்து முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஒரு கோடி இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56–ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்