கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டியதை அகற்றக்கோரி போராட்டம் - உதவி கலெக்டர் அலுவலகத்தில் அமைதி கூட்டம்
நிலத்தை ஆக்கிரமித்து கோவிலுக்கு சுற்றுச்சுவர் கட்டியதை அகற்றக்கோரி, உதவி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த தச்சம்பட்டு அருகில் உள்ள சு.பாப்பம்பட்டி கிராமத்தில் நன்னீர்குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நன்னீர்குளத்தின் அருகில் அரசு புறம்போக்கு நிலம் இருந்து உள்ளது. இதுவும் பயன்பாட்டில் இருந்தது. இந்த நிலையில் நன்னீர்குளம் அருகில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் கோவில் கட்டி உள்ளனர். அப்போது அவர்கள் இந்த அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்ததாகவும், நன்னீர்குளத்தில் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை குறித்து சு.பாப்பம்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர்களுக்கும், கோவில் கட்டி உள்ள மற்றொரு தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பிரச்சினைக்குரிய சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் திருவண்ணாமலையில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து உதவி கலெக்டர் தங்கவேல் தலைமையில் அவரது அலுவலகத்தில் அமைதிக் கூட்டம் நடைபெற்றது. இதில் நன்னீர்குளத்தில் அமைத்து உள்ள சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும் என்றும், அரசு புறம்போக்கு நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை 2 தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர்.