சாராயம் விற்பதை கண்டித்து போராட்டம் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்ததால் பரபரப்பு
செம்பனார்கோவில் அருகே சாராயம் விற்பதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செம்பனார்கோவில்,
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே மடப்புரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், அந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சாராயம் விற்று வருகிறார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், போலீசாரிடம் புகார் செய்தனர்.
அதன்பின்னரும் அவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று சாராயம் விற்பனை செய்வதை கண்டித்து மடப்புரம் கடைத்தெருவில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், சாராய பக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சாராய வியாபாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் நாகை-மயிலாடுதுறை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.