10 ஆண்டுகளுக்குப்பிறகு தூர்வாரப்பட்ட வெண்ணாறு பாசன வாய்க்கால் 1,107 ஏக்கர் விளை நிலங்கள் பயனடைகிறது
தஞ்சை அருகே வெண்ணாறு பாசன வாய்க்கால் 10 ஆண்டுகளுக்குப்பிறகு தூர்வாரப்பட்டது. இதனால் 5 கிராமங்களை சேர்ந்த 1,107 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைகின்றன.
தஞ்சாவூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள விளை நிலங்கள் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆறுகள் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கல்லணைக்கு வந்து அங்கிருந்து மேற்கண்ட ஆறுகளில் பாசனத்துக்கு திறந்து விடப்படும்.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் கிளை ஆறுகள், பாசன வாய்க்கால்களில் திறக்கப்பட்டு டெல்டா பகுதியில் மட்டும் 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இதில் வெண்ணாறு மூலம் தஞ்சை திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. வெண்ணாற்றில் தஞ்சை மாவட்டத்தில் 127 ஏ பிரிவு வாய்க்கால்களும், 806 பி பிரிவு வாய்க்கால்களும், 1,064 சி பிரிவு வாய்க்கால்களும், 526 டி பிரிவு வாய்க்கால் களும், 172 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 372 ஏ பிரிவு வாய்க்கால்களும், 2,359 பி பிரிவு வாய்க்கால் களும், 3,315 சி பிரிவு வாய்க்கால்களும், 1,540 டி பிரிவு வாய்க்கால்களும், 502 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன.
நாகை மாவட்டத்தில் 121 ஏ பிரிவு வாய்க்கால்களும், 767 பி பிரிவு வாய்க்கால்களும், 1,012 சி பிரிவு வாய்க்கால்களும், 500 டி பிரிவு வாய்க்கால்களும், 163 இ பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. வெண்ணாறு கோட்டத்தில் 34 ஏரி, குளங்களும் உள்ளன.
வெண்ணாறு கோட்டத்தில் தஞ்சையை அடுத்த அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள ஆ பிரிவு வாய்க்கால் களான நெய்குன்னம், பெரு நிலம், மகிமாலை, தீபாம்பாள்புரம் ஆகிய பகுதிகளில் 12 கிலோ மீட்டர் தூரம் பாசனத்துக்கு செல்கிறது. இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இதனால் மண்மேடிட்டும், செடி, கொடிகள் படர்ந்தும் பாசனத்துக்கு நீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து வெண்ணாறு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்த அடிப்படையில் தூர்வார முடிவு செய்தனர். அதன்படி இந்த வாய்க்கால் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன் மூலம் மலையபுரம், நெய்குன்னம், தீபாம்பாள்புரம், மகிமாலை, பெருநிலம் ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த 1,107 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.