கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-08-20 23:00 GMT

சிவகங்கை,

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், இதேபோன்று பணப்படிகள் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ராமு தலைமை தாங்கினார். சிவகங்கை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் ஜெகன், ஆஸ்பத்திரி டாக்டர்கள் மதியழகன், நாகநாதன், மீனா, கருணாகரன், மல்லிகா பாப்பையா, சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்