தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகள் வறண்டு கிடக்கும் அவலம்
ஒரு புறம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மறுபுறம் பாசன நிலங்கள் தரிசாக கிடக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம்(தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இந்த பகுதி காவிரி டெல்டா மாவட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால் இந்த ஆண்டு போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறிப்பிட்ட தேதியில் அணை திறக்கப்படவில்லை. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த மாதம்(ஜூலை) 19-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 22-ந் தேதி வந்தடைந்ததை தொடர்ந்து அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த பலத்த மழை காரணமாக 2 முறை மேட்டூர் அணை நிரம்பியது. நீர் வரத்து அதிகமாக இருந்ததால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கொள்ளிடம் கரை பகுதிகளில் பல கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
காவிரி டெல்டா பகுதியில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 820 ஏரி, குளங்கள் உள்ளன. இதில் காவிரி ஆறு பகுதியில் 4 ஏரிகளும், வெண்ணாறு பகுதியில் 34 ஏரி, குளங்களும், கல்லணைக்கால்வாய் பகுதியில் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் 695 ஏரி, குளங்களும் உள்ளன. இது தவிர பூதலூர் பகுதியில் கட்டளை கால்வாய், உய்யக்கொண்டான்கால்வாய் பாசன பகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏரி, குளங்கள் உள்ளன.
இதில் தற்போது கல்லணைக்கால்வாய் பகுதியில் 15-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் தான் முற்றிலும் நிரம்பி உள்ளன. சமுத்திரம் ஏரி, அய்யனார் ஏரி, தொண்டமான் ஏரி போன்ற ஏரிகள் நிரம்பி உள்ளன. 100-க்கும் மேற்பட்ட ஏரி, குளங்களுக்கு தற்போது தண்ணீர் செல்கின்றன. மற்ற ஏரி, குளங்களுக்கு இதுவரை தண்ணீர் எட்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் அந்த ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன.
இது தவிர உள்ளாட்சிக்கு சொந்தமான 1,200 ஏரிகள், குளங்கள் தஞ்சை மாவட்டத்தில் உள்ளன. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 480-க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் உள்ளன. இந்த ஏரி, குளங்களுக்கு காவிரி நீர் நிரப்பப்படும். இதில் தலைப்பகுதியில் உள்ள குளத்திற்கு சென்று அதன் பின்னர் சங்கிலி தொடர்போல மற்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் வாய்க்கால்கள், மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் 100 குளங்கள் மற்றும் 15 சிறுபாசன ஏரிகளுக்கு நீர் செல்கின்றன. மற்ற குளங்களுக்கு நீர் செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதே போல் வெண்ணாறு பகுதியிலும், காவிரி பகுதியிலும் ஒருசில குளங்களுக்கு தண்ணீர் செல்கின்றன. காவிரி டெல்டா பகுதியில் தற்போதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர் நிலைகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இவைகள் அனைத்தும் வறண்டு காணப்படுகிறது.
ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கடலில் தான் கலக்கின்றன. கல்லணைக்கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர் மட்டும் வீணாவது கிடையாது. இதில் திறக்கப்படும் தண்ணீர் ஏரி, குளங்களுக்கும், பாசனங்களுக்கு மட்டும் தான் பயன்படும். மற்ற ஆறுகளில் செல்லும் தண்ணீர் தேக்கி வைக்க வழி இல்லாததால் கடலில் தான் கலக்கின்றன.
கல்லணைக்கால்வாயில் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 500 கன அடி வரை தண்ணீர் திறக்கலாம். ஆனால் திறந்த ஓரிரு நாளில் கல்விராயன்பேட்டையில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது 3 ஆயிரம் கன அடி தான் தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்களுக்கு தண்ணீர் செல்லும் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாலும் நீர் செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் போன்ற கடைமடை பகுதிகளில் ஆற்று நீரை குளம், ஏரிகளில் தேக்கி வைத்துத்தான் பாசனம் மேற்கொள்வார்கள். தற்போது குளம் நிரம்பாத நிலையில் இதற்கு விடிவு காலம் கிடைக்குமா? சாகுபடி பணிகளை எப்படி தொடங்குவது என்ற கவலையில் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்து உள்ளனர்.
எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, தண்ணீர் வீணாகாமல் அனைத்து ஏரி, குளங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.