சேதமடைந்த பாலத்தின் மேல்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் உடையாமல் இருக்க இரும்பு பட்டைகள் அமைக்கும் பணி
சேதமடைந்த பாலத்தின் மேல்பகுதியில் செல்லும் குடிநீர் குழாய் உடையாமல் இருக்க இரும்பு பட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
குளித்தலை,
குளித்தலை நகராட்சி பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குளித்தலை பெரியபாலம் அருகேயுள்ள பரிசல்துறை காவிரி ஆற்றுப்பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கிணறு வடிவில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து இரும்பு குழாய்கள் மூலம் நகராட்சியின் எல்லை பகுதியில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கதொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்திலிருந்து ஆற்றின் கரைவரை குடிநீர் குழாய் கொண்டுவர 9 தூண்கள் கொண்ட சிறிய பாலம் ஆற்றில் கட்டப்பட்டது. அனைத்து கட்டுமான பணிகளும் முடிந்த பின்னர் குடிநீர் வடிகால் வாரியம் குளித்தலை நகராட்சி வசம் இதை ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி குடிநீர் குழாய் கொண்டுவருவதற்காக குளித்தலை பரிசல்துறை காவிரி ஆற்றில் கட்டப்பட்டிருந்த சிறிய பாலத்தின் 9-வது தூண் ஆற்று மணலில் சற்று புதைந்துள்ளது. இதன் காரணமாக 9-வது தூணில் இருந்து ஆற்றில் உள்ள நீரேற்று நிலையத்தின் மேல் பகுதி வரை உள்ள இப்பாலத்தின் இறுதி பகுதி போதிய பிடிமானம் இல்லாமல் சமநிலையில் இருந்து கீழ்பகுதி நோக்கி சற்று இறங்கியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று கிணற்றின் மேல் பகுதியில் இருந்து சுமார் 175 அடி நீளத்திற்கு பாலத்தின் நடுப்பகுதி வரை குடிநீர் குழாயை தாங்கும் வகையில் இரும்பு பட்டைகள் அமைக்கும் பணிகள் 2-வது நாளாக நேற்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாலத்தின் இறுதி பகுதி சாய்ந்து வருவது உடனடியாக கண்டறியப்பட்டுள்ளது. இல்லையெனில் இப்பாலத்தின் ஒருபகுதி முற்றிலும் இடிந்தும், குடிநீர் குழாய் உடைந்தும் விழுந்திருக்கும். அப்படி நடந்திருந்தால் குளித்தலை நகராட்சி பொதுமக்களுக்கு செய்யப்பட்ட குடிநீர் வினியோகம் தடைபட்டு குடிநீர் இன்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்திருப்பார்.
அனுமதியின்றி இப்பாலத்தின் அருகே திருட்டுத்தனமாக ஆற்றில் இருந்து மணல் அள்ளப்பட்ட காரணத்தால் பாலத்தையொட்டி ஆங்காங்கே பெரிய பள்ளம் ஏற்பட்டது. தற்போது காவிரி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தின் காரணமாக மேட்டுபகுதியில் இருந்த மணல் இப்பள்ளங்களை நோக்கி செல்வதால் மேட்டுபகுதியில் இருந்த பாலம் மண்ணில் புதையுண்டதற்கு காரணமாக அமைந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் இப்பகுதியில் மணல் திருடாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.