பிறந்து ஒரு மாதமான பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு கொலை செய்யப்பட்டதா? போலீஸ் விசாரணை
பூதப்பாண்டி அருகே பிறந்து ஒரு மாதமான பச்சிளம் பெண் குழந்தை மர்மமான முறையில் திடீரென இறந்தது. குழந்தை கொலை செய்யப்பட்டதா? என்பது குறித்து பெற்றோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பூதப்பாண்டி,
குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே காட்டுபுதூரை அடுத்த புதுகாலனி பகுதியை சேர்ந்தவர் முத்துகணேசன் (வயது 23), செங்கல் சூளை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (21). இவர்கள் அந்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உண்டு. இந்த நிலையில் லட்சுமி இரண்டாவது முறையாக கர்ப்பமானார். அவருக்கு கடந்த மாதம் 17–ந் தேதி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அங்கு சிகிச்சை முடிந்த பின்பு தாயும் குழந்தையும் வீட்டுக்கு திரும்பினர்.
நேற்று முந்தினம் இரவு கணவன்–மனைவி இருவரும் வழக்கம் போல் குழந்தைகளுடன் தூங்க சென்றனர். நள்ளிரவில் லட்சுமி திடீரென சத்தம் போட்ட நிலையில் பக்கத்து வீட்டில் சென்று தனது இரண்டாவது குழந்தை இறந்து கிடப்பதாக கூறி அழுதார். அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர்.
அப்போது, பிறந்து ஒரு மாதமான பச்சிளம் குழந்தை இறந்து கிடந்தது. அதன் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. இதைபார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக பொதுமக்கள் கருதினர்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் குமுதாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாவது பெண் குழந்தை பிறந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான், குழந்தையின் சாவுக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக குழந்தையின் தாய், தந்தையான முத்துகணேசனையும், லட்சுமியையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.