பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டி: சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
பாரதிதாசன் பாடல்கள் ஒப்புவித்தல் போட்டியை சிவா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
போட்டிகளை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, தமிழ் வளர்த்த கருணாநிதிக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் அவரால் தொடங்கப்பட்ட இதுபோன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதுதான் என்று குறிப்பிட்டார்.
இந்த போட்டியில் புதுவை தெற்கு மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள், தனியார் உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், சுயநிதி பள்ளிகள் ஆகியவற்றில் 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்புவரை படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 500–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
போட்டியின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்ச்சங்க பொருளாளர் சீனு.மோகன்தாஸ் மற்றும் சிறப்பு நடுவர் குழு நெறியாளர்களாக வேல்முருகன், சீனு.வேணுகோபால், என்ஜினீயர் பாலசுப்ரமணியன், திருவளவன், இளங்கோவன், அப்துல்மஜீத், கலியபெருமாள், கவிபூஞ்சோலை ஆகியோர் இருந்து சிறப்பாக பாடல்களை ஒப்புவித்த மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குணாதிலீபன், அமுதாகுமார், பொருளாளர் சண்.குமாரவேல், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், இளங்கோவன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன், கலியகார்த்திகேயன், இலக்கிய அணி தலைவர் எம்.எஸ்.ராஜா, அமைப்பாளர் பி.டி.பன்னீர்செல்வம், பொருளாளர் ராஜேந்திரன், துணைத்தலைவர்கள் ஸ்ரீதர், கலிவரதன், துணை அமைப்பாளர்கள் அருணகிரி, கலியசாமி, தர்மராஜ், ஆளவந்தார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் வடக்கு மாநில தி.மு.க. சார்பில் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி அம்பலத்தடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டிமார் திருமண நிலையத்தில் நடந்தது. போட்டிகளை வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள், இலக்கிய அணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். வடக்கு மாநில பகுதிக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதிதாசன் பாடல்களை ஒப்புவித்தனர்.