கேராளவில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி

கேராளவில் மழை வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2018-08-19 22:30 GMT

ராமேசுவரம்,

கேராளவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கொச்சின், வயநாடு, திருச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இதுவரை கேராளவில் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும், பல பேர் மாயமாகியும் உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை தேசிய பேரீடர் மீட்பு குழுவினர் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் கேரளாவில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்கு அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கம் மற்றும் கடற்கரை புரோகிதர்கள் சங்கம் சார்பில் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பாஸ்கரன், துணை தலைவர் முனியசாமி, செயலாளர் காளிதாஸ், துணை செயலாளர் வெள்ளைச்சாமி, இணை செயலாளர் கண்ணன், பொருளாளர் மலைச்சாமி, பிரதிநிதிகள் ராஜா, ரவி, பால்ராஜ், கடற்கரை புரோகிதர் சங்க தலைவர் சேகர், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் ரமணி, பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்