தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து முற்றுகையிட்டு போராட்டம் முத்தரசன் பேட்டி
குளம், ஏரிகள் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடந்துள்ளதை கண்டித்து வருகிற 28-ந் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், நிருபர் களுக்கு பேட்டியளித்தார்.
குளம், வாய்க்கால், ஏரிகள் தூர்வாரும் பணிக்காக ஒதுக்கும் நிதி ஒழுங்காக பயன்படுத்தவில்லை. டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய பகுதிகளில் குளம், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வார இந்த ஆண்டு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று விட்டதாகவும், ஏரி குளங்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாகவும், முன்னுக்குப்பின் முரணான தகவலை தெரிவிக்கின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதை கண்டித்து வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகங்களை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பெரியசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், ஒன்றிய செயலாளர் வீரமணி, நகர செயலாளர் கலைச்செல்வன் உள்பட பலர் உடன் இருந்தனர்.