காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியும் கடைமடை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் குறைவாக வருவதால் விவசாய பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கீரமங்கலம்,
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காவிரி கடைமடை பாசனத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு கர்நாடகாவில் மழை அதிகரித்துள்ளதால் காவிரிக்கு தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. அதனால் கடந்த ஜூலை மாதம் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைமடை பாசனப்பகுதிகளுக்கு சில நாட்கள் முழு அளவில் தண்ணீர் வந்தது.
காவிரியில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால், தடையின்றி கடைமடைக்கும் தண்ணீர் வரும் என்று கறம்பக்காடு, செரியலூர், மேற்பனைக்காடு, நெய்வத்தளி, வல்லவாரி, அரசர்குளம், நாகுடி மற்றும் பல்வேறு கிராம விவசாயிகளும் முதல்கட்டமாக நாற்றங்கால் அமைத்து உள்ளனர். மேலும் வயல்களில் இயற்கை உரங்களை கொட்டி உழவுப் பணிகளும் நடந்து வருகிறது. தொடர்ந்து முதல்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் ஆற்றில் தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்தது.
இதில் முதல்கட்ட பணிகள் கூட முழுமையாக செய்ய தண்ணீர் வந்து சேரவில்லை. மேலும் பாசன ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிரம்பவில்லை என்று கடந்த 4-ந்தேதி வல்லவாரி ஆற்றுப்பாலம் அருகே ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ மெய்யநாதன் தலைமையில் சுமார் 300 விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்திற்கு தயாரானார்கள். அப்போது அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு வல்லவாரி கடைமடைப் பாசனத்திற்கு வல்லவாரி பகுதிக்கு 500 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்படும் என்று உத்தரவாதம் எழுதிக் கொடுத்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.
அதே போல அடுத்த சில நாட்களுக்கு பிறகு அறந்தாங்கி வந்த அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் நாகுடி பகுதி விவசாயிகள் தடையின்றி தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர். இதையடுத்து 300 கன அடி தண்ணீர் தொடர்ந்து வர அதிகாரிகளிடம் பேசுவதாக அவர் உறுதி கூறினார். இந்த நிலையில் சில நாட்கள் வந்த தண்ணீர் மீண்டும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் கல்லணை கால்வாயின் கரைகளில் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதா? கரைகள் பலமாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய கல்லணை பாசன கண்காணிப்புக்குழு தலைவர் அருண் தலைமையிலான குழுவினர் கடந்த 14-ந்தேதி இரவு மேற்பனைக்காடு வந்து ஆய்வு செய்த பிறகு, கல்லணை கால்வாயில் சுமார் 3 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடலாம் என்றும், கரைகள் வலுவாக உள்ளது என்றும், மேலும் மேட்டூருக்கு தற்போது அதிக அளவில் தண்ணீர் வரத்து உள்ளதால் முறை வைக்காமல் தொடர்ந்து கடைமடைப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கலாம் என்றும் கூறினர்.
இந்த அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகும் சில நாட்களாக தொடர்ந்து தண்ணீர் வரவில்லை. தற்போது கல்லணையில் தண்ணீர் வந்து கொண்டிருந்தாலும் மேற்பனைக்காடு பகுதிக்கு சனிக்கிழமை மாலை 352 கனஅடியும், நாகுடி பகுதிக்கு சுமார் 160 கனஅடியும் மட்டுமே தண்ணீர் செல்கிறது. ஓரளவுக்கு தண்ணீர் செல்வதால் மேற்பனைக்காடு பகுதியில் உள்ள 17 பாசனக்குளங்களில் 7 குளங்கள் மட்டும் சுமாரக தண்ணீர் நிரம்பியுள்ளது. மீதி உள்ள 10 குளங்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. அதனால் அந்த பகுதி விவசாயிகள் விவசாயப் பணிகள் தொடங்க முடியாமல் தவிக்கின்றனர்.
அதேபோல நாகுடி பகுதியில் மிகக் குறைவாக தண்ணீர் வருவதால் 162 ஏரி, குளங்களில் சில ஏரி, குளங்கள் கூட நிரம்பவில்லை என்கின்றனர் விவசாயிகள். மேலும் தண்ணீர் வரத்து குறைவாக உள்ளதால் விவசாயப் பணிகள் முழுமையாக பாதிக்கப் பட்டுள்ளது என்று விவசாயிகள் கூறி வருகின்றனர். மேலும் வெள்ளப் பாதிப்பு வரும் என்று எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் கடைமடை பகுதியில் தண்ணீரே வரவில்லை. தொடர்ந்து தண்ணீர் திறந்தால் மட்டுமே பாதிப்பின்றி விவசாயம் செய்ய முடியும் என விவசாயிகள் புலம்பி வருகின்ற னர். மேலும் நாகுடி பகுதி விவசாயிகள் அமைச்சர் சொன்னது போல 300 கனஅடி அளவுக்கு முறையின்றி தண்ணீர் கொடுக்க வேண்டும். தண்ணீர் குறைந்து வருமேயானால் சில நாட்களில் தொடர் போராட்டம் நடத்தப்படும், என விவசாயிகள் கூறினர்.