ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஓட்டலுக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த வாலிபர்களால் பரபரப்பு
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்து நண்பர்களுடன் சாப்பிட்ட வாலிபரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பெரம்பூர்,
சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சம்பவத்தன்று இரவு சில வாலிபர்கள் காரில் வந்து உணவு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
அதில் ஒரு வாலிபரின் கையில் துப்பாக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள், அவர்கள் ரவுடி கும்பலாக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அந்த வாலிபர்கள் சென்ற காரின் பதிவு எண் குறித்து தகவல் தெரிவித்து, போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில் அந்த கார் பேசின்பிரிட்ஜ் வழியாக எம்.கே.பி.நகர் நோக்கி சென்றது. அங்கு அந்த காரை எம்.கே.பி.நகர் போலீசார் மடக்கிப்பிடித்து, அதில் இருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர், சென்னை வியாசர்பாடி சர்மா நகரைச் சேர்ந்த குகன் என்ற குகனேஸ்வரன் (வயது 27) என்பதும், அவரிடம் இருந்தது பொம்மை துப்பாக்கி என்பதும் தெரிந்தது.
திருவிழா மற்றும் சுபநிகழ்ச்சிகளின்போது திருமண மண்டபம் முன்பு சிறுவர்களின் விளையாட்டுக்காக பலூன்களை சுடுவது மற்றும் பலூன் பொம்மை உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தும் ஒப்பந்த நிறுவனத்தில் அவர் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வியாசர்பாடியில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்திவிட்டு, தன்னுடன் வேலை பார்க்கும் சகநண்பர்களுடன் வாடகை காரில் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டதும், அப்போது பொம்மை துப்பாக்கியை தூக்கிச்சென்றதும், சாப்பிட்டு விட்டு வரும் வழியில் நண்பர்கள் அனைவரும் அவரவர் வீடுகளில் இறங்கிவிட குகன் மட்டும் கடைசியாக தனது வீட்டுக்கு காரில் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பொம்மை துப்பாக்கியுடன் ஓட்டலுக்கு வந்தது தொடர்பாக குகனிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.