கேரளா வெள்ள பாதிப்பு: இந்திய மருத்துவ கழகம் சார்பில் நிவாரண பொருட்கள்
இந்திய மருத்துவ கழகம் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தேனி,
தேனி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த சில நாட்களாக பல்வேறு அமைப்புகள் சார்பிலும், அரசு துறைகளின் சார்பிலும் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. நேற்று இந்திய மருத்துவ கழகத்தின் கம்பம் பள்ளத்தாக்கு கிளை சார்பில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அரிசி, பருப்பு, நாப்கின், மருந்து பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் 2 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது கம்பம் பள்ளத்தாக்கு கிளையின் செயலாளர் டாக்டர் தியாகராஜன் மற்றும் டாக்டர்கள் பலர் உடன் இருந்தனர்.
தேனி மாவட்ட வர்த்தகர் காங்கிரஸ் சார்பில் வண்டிப்பெரியாறு பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மாவட்ட தலைவர் சங்கரநாராயணன் தலைமையில் நிர்வாகிகள் பொருட்களை கொண்டு சென்றனர். அதேபோல், தேனியில் பசுமைத் தேனி அமைப்பு சார்பில் சரக்கு வேனில் வெள்ள நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. காமாட்சிபுரம் சென்டெக்ட் தொண்டு நிறுவனம் சார்பில் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதுபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், அரிசி, பருப்பு, பால் பவுடர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கம்பம்மெட்டு வழியாக கொண்டு செல்லப்பட்டு கட்டப்பனை பகுதியில் உள்ள கேரள மாநில வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.