பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்யாண் - தானே
மத்திய ரெயில்வேயின் கல்யாண் - தானே இடையே ஸ்லோ வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.48 மணி முதல் மாலை 4.14 மணி வரை ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் கல்யாண் - முல்லுண்டு இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்படும்.
இந்த ரெயில்கள் போதிய பிளாட்பார வசதி இல்லாததால் தாக்குர்லி, கோபர், மும்ரா, கல்வா ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்காது. பயணிகள்கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ ரெயில்களில் தாக்குர்லி, கோபர், மும்ரா, கல்வா ஆகிய பகுதிகளுக்கு செல்லலாம்.
ரெயில்சேவை ரத்து
துறைமுக வழித்தடத்தில் குர்லா - வாஷி இடையே இன்று காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே காலை 10.34 மணி முதல் பிற்பகல் 3.39 மணி வரை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலுக்கு ரெயில்கள் இயக்கப்படாது. காலை 10.21 மணி முதல் பிற்பகல் 3.41 மணி வரை வாஷி, பேலாப்பூர் மற்றும் பன்வெலில் இருந்து சி.எஸ்.எம்.டி.க்கு ரெயில்கள் இயக்கப்படாது.
இந்த நேரத்தில் சி.எஸ்.எம்.டி. - குர்லா, வாஷி - பன்வெல் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.
மேற்கு ரெயில்வே
மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் போரிவிலி - அந்தேரி இடையே விரைவு வழித்தடத்தின் இருபாதை களிலும் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 2.35 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் விரைவு ரெயில்கள் அனைத்தும் போரிவிலி - அந்தேரி இடையே ஸ்லோ வழித்தடத்தில் இயக்கப்படும். பராமரிப்பு பணி காரணமாக ஒரு சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரெயில்கள் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்படலாம்.
இந்த தகவலை மத்திய, மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.